ராமநாதபுரத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-23 18:35 GMT

தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார். மாநில பொருளாதார பிரிவு தலைவர் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட பொதுசெயலாளர்கள் ஆத்மாகார்த்திக், மணிமாறன், நாகேந்திரன், மாவட்ட துணை தலைவர் சங்கீதா, மாவட்ட பட்டியல்அணி தலைவர் ரமேஷ்கண்ணன், ராமேசுவரம் நகர் தலைவர் ஸ்ரீதர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்