ராமகோபாலன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
அரக்கோணத்தில் ராமகோபாலன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அரக்கோணம் இந்து முன்னணி சார்பில் பழைய பஸ் நிலையம், சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகில் மற்றும் ஜோதி நகர் ஆகிய இடங்களில் இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஜெ.குமார் தலைமையில் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராமகோபாலன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகர செயலாளர்கள் சுதாகர், பிரபா, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோட்டி, தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.