போதைப்பொருட்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

போதைப்பொருட்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.

Update: 2023-02-18 19:15 GMT

தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், போதையற்ற தமிழ்நாடு என்ற தலைப்பில், போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. அதன்படி நாகை மாவட்டம் சிக்கல் கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சிந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் மாலா முன்னிலை வகித்தார். சிக்கல் அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர் புஷ்பராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபேஸ், ஊராட்சி மன்ற தலைவர் விமலாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்