குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை நகராட்சி ஆணையாளர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் சேலம் மெயின் ரோடு, பள்ளிபாளையம் ரோடு வழியாக தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.