பரமக்குடி,
பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள காந்த குளத்து முனியப்ப சுவாமி மற்றும் காளீஸ்வரி அம்மன் கோவிலின் 56-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. அதையொட்டி காட்டு பரமக்குடியில் உள்ள கலியுகம் கண்ட விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம். அக்னிசட்டி, இளநீர் காவடி, வேல் காவடி எடுத்து ஓட்டப்பாலம், ஐந்து முனைப் பகுதி, பொன்னையாபுரம் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்பு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. அன்னதானத்தை சினிமா தொழிலதிபர் ஏழுமலையான் முன்னிலையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தொடங்கி வைத்தார். இதில் முருகன், கணேசன், முனியராஜ், நாகராஜன், தியாகராஜன், உமா மகேஸ்வரன், கார்த்திக் விஜய் உள்பட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.