கொல்லிமலையில்பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

Update:2023-03-23 00:30 IST

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் உள்ள செம்மேடு ஜி.டி.ஆர். அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி திடலில் தொடங்கிய ஊர்வலத்தை கொல்லிமலை வனச்சரகர் சுப்பராயன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின்போது மாணவ, மாணவிகள் செம்மேட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் தண்ணீரை வீணாக்காதே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி சென்றனர். இதில் வாழவந்தி நாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், வனவர்கள் அஜித்குமார், ரகுநாதன், தீபக், ஜி.டி.ஆர். பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சரவணன், கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் கபில்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் வனத்துறை சார்பில் தீத்தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாணவ, மாணவிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்