ஆன்மிக ஊர்வலம்

ராஜகோபாலபுரத்தில் ஆன்மிக ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-22 17:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வல திருவிழா நடந்தது. குத்தாலம் கடைவீதி மன்மதீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக வழிபாட்டு மன்றத்தில் நிறைவடைந்தது. இதில் குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் சிவப்பு புடவை அணிந்து தலையில் கஞ்சி கலயத்தை சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தையொட்டி குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்