திருவாரூரில், சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.

Update: 2022-07-16 18:02 GMT

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.

காலமுறை ஊதியம்

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உணவு மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி திருவாரூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊர்வலம் தொடங்கியது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் கரிகாலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.

கோஷங்கள்

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் பிரகாஷ், சங்க மாநில செயலாளர் லதா, மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி, மாவட்ட பொருளாளர் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்