குமாரபாளையத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குமாரபாளையத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2022-06-17 18:09 GMT

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் தேசிய மாணவர் படை மற்றும் விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் தொடங்கிய ஊர்வலத்தை தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலமானது பள்ளிபாளையம் பிரிவு பஸ் நிலையம், நகரின் முக்கிய வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில் விடியல் ஆரம்பம் அமைப்பின் தலைவர் பிரகாஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராமச்சந்திரன், சிவகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.எம்.எல். மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே நகராட்சி அலுவலகம் காந்தி சிலை முன்பு குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதிமொழி வாசித்து எடுத்து கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்