தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி

தேன்கனிக்கோட்டையில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-06-04 17:29 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, 'என் குப்பை எனது பொறுப்பு' என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர்சீனிவாசன் பேரணியை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது. பேரணியில் 'என் குப்பை எனது பொறுப்பு' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட தொப்பி மற்றும் மஞ்சள் பை ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் துாய்மைக்கான மக்கள் இயக்க உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்கலாம், துப்புரவு ஆய்வாளர் நடேசன், இளநிலை உதவியாளர் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்