ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
வேதாரண்யத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
வேதாரண்யம்:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், நகர காங்கிரஸ் தலைவர்அர்ஜுனன், முன்னாள் நகரத் தலைவர் வைரம், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் போஸ், நகரத்துணைத் தலைவர் டெல்லி குமார், வட்டாரத் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.