கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மாபெரும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராயனூர், தில்லைநகர் பகுதி வழியாக செல்லும் தாந்தோணி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் அப்பகுதியை சுற்றிலும் அமைந்துள்ள முட்புதர்கள், நெகிழி குப்பைகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி துப்புரவு ஆய்வாளர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.