ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது
தொடர்மழையினால் ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது.
ராஜபாளையம்,
தொடர்மழையினால் ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது.
தொடர்மழை
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நகரில் மழையினால் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி ேசறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அய்யனார் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குடிநீர் தேக்கம் நிரம்பியது
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
அதேபோல தொடர்மழையினால் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.