ராஜகோபால சுவாமி கோவில் தெப்பத் திருவிழா

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் ஆனி தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-05 17:21 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் ஆனி தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெருமாள் கோவில்

வைணவ கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாக ராஜகோபால சுவாமி கோவில் திகழ்கிறது. ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடப்பது இக்கோவிலின் சிறப்பாகும். இங்கு, ஆண்டுதோறும் ஆனி மாத உற்சவம் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு ஆனி தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் பவுண்டரிகபுரம் ஆசிரமம் கே.எஸ்.ராமன் ஆகியோர் முன்னிலையில் கோவில் தீட்சிதர் செல்லப்பா தலைமையில் தீட்சிதர்கள் கொடியேற்றி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தெப்ப உற்சவம்

இந்த தெப்பத்திருவிழா வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ருக்மணி, சத்தியபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்