ராஜ ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா - விமரிசையாக தொடங்கியது
பாரம்பரிய கலைகளுடன் ராஜ ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக தொடங்கியது.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ஸ்ரீ பிரஹதாம்பாள்தாஸ் எச்.எச்.ஆர். ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இந்நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுகரசர், எம்.எம்.அப்துல்லா, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மாமன்னர் திருவுருவப்பட ஊர்வலம், கவியரங்கம், கண்காட்சி, நாட்டியஅரங்கம், வாழ்த்தரங்கம், பட்டிமன்றம், சுழலும் பாட்டரங்கம் ஆகியவை நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில், ராஜகோபால தொண்டைமானின் படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த விழாவில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர், தஞ்சை மன்னர் குடும்பத்தினர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சிகள், மதிய விருந்துகள் நடைபெற்றன.