ரைஸ்மில் கதவை உடைத்து பணம் திருட்டு
ரைஸ்மில் கதவை உடைத்து பணம் திருடுபோனது
மதுரை திருப்பரங்குன்றம் விவேகானந்தர் தெரு பாலாஜி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 43).இவர் சுப்பிரமணியபுரம் நல்லமுத்து பிள்ளை காலனியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ரைஸ்மில்லை மூடி விட்டு மறுநாள் காலை வந்தார். அப்போது மில்லின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 8 ஆயிரம் ரூபாய் மற்றும் ரைஸ்மில் அறுவை பிளேட்டுகள் போன்றவை திருடப்பட்டு இருந்தன. இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.