ரேஸ்கோர்சில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்

ரேஸ்கோர்சில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

Update: 2022-12-10 18:45 GMT


கோவை ரேஸ்கோர்சில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மழைநீரை சேமிக்கும் வகையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:-

மழைநீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் ஜெர்மன் தொழில் நுட்பத்தில் நவீன முறையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த தொட்டியின் மூடியானது பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் நீலநிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மழைநீர் தொட்டிகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இவ்வாறு அவர் கூறினாா்.

Tags:    

மேலும் செய்திகள்