மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-10-23 02:10 IST

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நீர்வளம் நிலவளம் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், கருவேல மரங்களை அழித்தல், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ரிச்சர்டு ராஜ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மரக்கன்று நடும் விழாவும், விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டது. துணை வேளாண் அலுவலர் ராஜதுரை, கால்நடை உதவி டாக்டர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், ரம்யா, பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்