மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் அருவியில் குளிக்க தடை.

Update: 2022-11-30 20:56 GMT

தென்காசி,

குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் குளித்து செல்கிறார்கள். நேற்று முன்தினம் இரவு தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அருவியை பார்த்து சென்றனர்.

எனினும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்