சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்

Update: 2022-10-14 10:25 GMT

வீரபாண்டி

தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்து ஒரு வார காலமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சாலையின் நடுவில் மழைநீர் தேக்கம் அடைந்தது. திருப்பூர் வீரபாண்டி பஸ் நிறுத்தம் அருகே, மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுகள் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அரசு சுகாதார மையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் என பலரும் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அதிக வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியை தூய்மைப்படுத்தி மழைநீர் மற்றும் கழிவு நீர் தேக்கமடையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்