விருத்தாசலம்-சென்னை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

விருத்தாசலம்-சென்னை சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.;

Update:2022-11-13 04:09 IST

கடலூர்,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சி பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழையின் காரணமாக விருத்தாசலம்-சென்னை சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளதால் வாகன் ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 

Tags:    

மேலும் செய்திகள்