சென்னையில் மழை....! கோடை வெயில் சற்று தணிந்தது...!
சென்னையில் ஒரிரு இடங்கள் லேசான மழை பெய்தது.
சென்னை,
கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று லேசான மழை பெய்தது. சென்னை எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான மழை பெய்தது.
இந்த மழை காரணமாக கோடை வெயில் சற்று தணிந்தது. கோடை மழையால் வெப்பம் குறைந்ததையடுத்து மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.