சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது.
சென்னை,
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.