வேலாயுதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், புன்னம், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.