ஈரோட்டில் மழை

ஈரோட்டில் மழை பெய்தது.

Update: 2023-09-24 21:01 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் குறைவாக இருந்தாலும் உருக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பகலிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பின்னர் மாலையில் வானில் கருமேகங்கள் கூடின. இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் வரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வீரப்பன்சத்திரம், முனிசிபல் காலனி, பெரியவலசு, நாச்சியப்பாவீதி, கருங்கல்பாளையம், சூளை, சம்பத்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன், மழைநீர் கலந்து சென்றது. இதனால் பொதுமக்கள் ரோடுகளில் நடந்து செல்ல சிரமப்பட்டனர். மழையின் காரணமாக நேற்று இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்