ரேஷன் கடைக்குள் புகுந்த மழை வெள்ளம்

ரேஷன் கடைக்குள் புகுந்த மழை வெள்ளம்

Update: 2023-03-16 19:46 GMT

குலசேகரம்,

குலசேகரம் பகுதியில் நேற்று பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதில் குலசேகரம்-திருவரம்பு சாலையில் நாகக்கோடு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடைக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அப்போது கடையில் பணியில் இருந்த பெண் ஊழியர் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மழை காரணமாக தொடர்ந்து தண்ணீர் கடைக்குள் புகுந்த வண்ணம் இருந்தது. இதுபற்றி குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸூக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களை ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்தார். தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சர்க்கரை, அரிசி மூடைகள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது. சில மூடைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன.

இதற்கிடையே இனி வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் உணவு பொருட்களை பாதுகாக்க உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குலசேகரம், மார்ச்.17-

Tags:    

மேலும் செய்திகள்