தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-09-24 07:32 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் நாளை மறுதினம் வரை (செப்.24-26) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 27-28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதியில்   

Tags:    

மேலும் செய்திகள்