நாமக்கல்லில் திடீர் மழை

நாமக்கல்லில் திடீர் மழை

Update: 2022-09-28 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. நாமக்கல் நகரிலும் காலை முதல் மாலை வரை வெயில் பொதுமக்களை சுட்டெரித்தது. மாலையில் வானத்தில் கருமேகம் திரண்டது. இரவு 7.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால் இரவு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்