அந்தியூர் பெரிய ஏரி நீர்மட்டம் 14 அடியாக உயர்வு

அந்தியூர் பெரிய ஏரி நீர்மட்டம் 14 அடியாக உயர்வு

Update: 2022-09-11 15:57 GMT

அந்தியூர்

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை அதன் முழு கொள்ளளவான 33.46 அடி கொள்ளளவை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் 8 கன அடி நீர் வெளியேறிக்கொண்டு உள்ளது. இது கெட்டி சமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திய பாளையம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது.

இதனால் 16 அடி உள்ள அந்தியூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் தற்போது 14 அடியாக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஆப்பக்கூடல் ஏரி அதன் முழு கொள்ளளவான 11 அடியை எட்டியது. இந்த ஏரியில் இருந்து உபரி நீர் 25 கன அடி நீர் வெளியேறி வருகிறது. மேலும் 17.50 அடியாக உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி தற்போது 11.50 அடியாகவும், 11.25 அடியுள்ள எண்ணமங்கலம் ஏரி தற்போது 7.25 அடியாகவும், 12 அடி உள்ள சந்தியபாளையம் ஏரி தற்போது 11 அடியாகவும், 13 அடியாக உள்ள வேம்பத்தி ஏரி 5.5 அடியாகவும், 15.50 அடியாக உள்ள தண்ணீர் பள்ளம் ஏரி தற்போது 14.25 அடியாகவும் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்