தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை: பாலக்கோட்டில் 80.20 மி.மீ பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. பாலக்கோட்டில் 80.20 மி.மீ பதிவானது.

Update: 2022-06-17 16:57 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை வரை இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த இந்த மழை காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தர்மபுரி-11, பாலக்கோடு- 80.20, மாரண்டஅள்ளி- 78, பென்னாகரம்- 26, ஒகேனக்கல்-51. இந்த மழை காரணமாக நேற்று குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனிடையே நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்