மதுரை நகரில் பலத்த மழை

மதுரை நகரில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-06-15 20:37 GMT


மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் கடுமையான வெப்பம் இருந்தது. அதன்படி, 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து மீண்டும் மாலை 5 மணிஅளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு மழைக்கான அறிகுறியை வெளிப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சில நிமிடங்களில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்ற காட்சிகளையும் காணமுடிந்தது.

குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதியில் உள்ள இடங்களில் மழைநீர் தேங்கி நின்ற காட்சிகளை காண முடிந்தது. மாலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள், வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் என பரபரப்பாக மக்கள் சென்று கொண்டிருந்த வேளையில் மழை பெய்ததால் நகரின் முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேபோல், புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்