தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 70.6 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாலக்கோடு- 69.2, மாரண்டஅள்ளி-33 பென்னாகரம்- 25, மாவட்டம் முழுவதும் சராசரியாக 21.98 மி.மீ.மழை பதிவானது. இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் ஏரிகள், குளங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பரவலாக உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.