ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-14 21:56 GMT

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கமான டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை உதவி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் சகாயவில்பிரட் முன்னிலை வகித்தார். நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கோவையில் இருந்து சீரடிக்கு சுற்றுலா ரெயில் என்ற பெயரில் தனியார் ரெயில் விடுவதை கண்டித்தும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் முன்னாள் தலைவர் ரத்தினவேலு நன்றி கூறினார்.நெல்லையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்