ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-05-08 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் அகில இந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் கிளைச்சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஏ. அருமைராஜ் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் எஸ். தங்க வேலு வரவேற்று பேசினார். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ். ஹரிகரசுப்பிரமணியன், பொருளாளர் முருகைய்யா ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் பாராளுமன்ற நிலை குழுவின் 110-வது அறிக்கை பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களை அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய விதிகளை முறைப்படுத்தி வருமான வரி செலுத்துவதிலிருந்து ஓய்வூதியர்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மகளிர் அணி தலைவி பட்டம்மாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்