ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-10 10:55 GMT

தூத்துக்குடி தெற்கு ரெயில்வே ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ரெயில்வே ஊழியர் சங்க தூத்துக்குடி கிளை தலைவர் அழகுவிஜி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வேல்முருகன், காந்திசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்