ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு தட்சிண ரெயில்வே ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் கிளை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை - ஷீரடிக்கு தனியார் ெரயில் இயக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மண்டல துணைச் செயலாளர் கே. ராஜூ, தூத்துக்குடிக்கு கிளை நிர்வாகிகள் தளவாய் ராஜ், குரூஸ் அந்தோணி, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கிருஷ்ண வேணி, தெய்வேந்திரன், மோகன்தாஸ், ஆனந்த், பாலகிருஷ்ணன், ராமசுப்பு, தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.