பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில் மறியல்
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரக்கோணத்தில் ரெயில் மறியல் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமலாக்கத் துறையை கண்டித்தும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஜவகர் பால்மஞ் அணியின் சார்பில் அரக்கோணம் ரெயில்நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில தலைவர் நரேஷ் குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.