தண்டவாள பராமரிப்பு பணி: ஈரோட்டில் இருந்து புறப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணி
ஈரோடு ரெயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் வருகிற ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி வரை ஈரோடு வழியாக செல்லும் சில ரெயில்கள் மாற்று வழி பாதையில் இயக்கப்படுகிறது.
அதன்படி மைசூரு- மயிலாடுதுறை (வண்டி எண் 16232) எக்ஸ்பிரஸ் ரெயில், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வராமல் நாமக்கல் வழியாக கரூர் செல்கிறது. மைசூரு- தூத்துக்குடி (16236), வாஸ்கோடாகாமா -நாகப்பட்டினம் (17315), ஸ்ரீமதா வைஷ்னோதேவி கற்றா- திருநெல்வேலி (16788), சண்டிகர்- மதுரை (12688), ஒக்கா-தூத்துக்குடி (19568), கச்சிகுடா-மதுரை (17615), தூத்துக்குடி- மைசூரு (16235), திருநெல்வேலி- ஸ்ரீ மதா வைஷ்னோதேவி கற்றா (16787), மதுரை- சண்டிகர் (12687), தூத்துக்குடி -ஒக்கா (19567), நாகப்பட்டினம்-வாஸ்கோடகாமா (17316), மதுரை- கச்சிகுடா (17616), மயிலாடுதுறை-மைசூரு (16231) ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 13-ந் தேதி வரை சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூர் ரெயில் நிலையத்துக்கு செல்லும் வகையில் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. எனவே இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வராது.
ரெயில்கள் ரத்து
இதேபோல் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு (06846) இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடுக்கு (06845) இயக்கப்படும் ரெயிலும், 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
ஈரோட்டில் இருந்து மேட்டூர் அணைக்கு (06407) இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேட்டூர் அணையில் இருந்து ஈரோட்டுக்கு (06408) இயக்கப்படும் ரெயிலும் 14-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.