ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நேற்று சின்னதாராபுரத்தில் தோழர் களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிறுவன தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் கவின்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.