ராகுல் காந்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அறம் வென்றிருக்கிறது - செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அறம் வென்றிருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-04 10:14 GMT

புதுடெல்லி,

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அறம் வென்றிருக்கிறது. இதன் மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு மீண்டும் ஒருமுறை குட்டு வைத்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மேலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தனது கடமையை ஆற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்