ஒற்றுமை யாத்திரையை துவங்க ராகுல் காந்தி இன்று சென்னை வருகை - பாதுகாப்பு அதிகரிப்பு

ஒற்றுமை யாத்திரையை துவங்குவதற்காக இன்று சென்னை வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-09-06 03:17 GMT

சென்னை,


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 7-ந்தேதியில் இருந்து ஒற்றுமை யாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்கிறார்.


விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு சென்னையில் தங்கும் ராகுல் காந்தி, நாளை(புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ராகுல் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து காரில் சென்னைக்கு திரும்பி வரும் ராகுல் காந்தி, காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்