சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
கமுதி அருகே கோவில் திருவிழாவையொட்டி பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன.
கமுதி,
கமுதி அருகே முஸ்டகுறிச்சி கிராமத்தில் பெத்தனாச்சியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றதை சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 4-ம் இடம் பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.