வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம்கள்ளக்காதலன் மீது திராவகம் வீசிய பெண்பவானியில் பரபரப்பு சம்பவம்

கள்ளக்காதலன் மீது திராவகம் வீசிய பெண்

Update: 2023-03-11 20:52 GMT

வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம் அடைந்த பெண், கள்ளக்காதலன் மீது திராவகத்தை வீசினார். இந்த சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளத்தொடர்பு

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். அதே பகுதியை சேர்ந்தவர் 27 வயது அவரது உறவுக்கார பெண். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து அந்த பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்கும், 27 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது.

வேறொரு பெண்ணை திருமணம்...

இந்த நிலையில் அந்த வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த விஷயம் வாலிபரின் கள்ளக்காதலிக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வாலிபர் கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் அவரிடம், "என்னை ஏமாற்றி விட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறாயா"? என கேட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள் ளது.

திராவகம் வீச்சு

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண், கழிப்பறைக்கு பயன்படுத்தப்படும் திராவகத்தை எடுத்து அந்த வாலிபர் மீது வீசியுள்ளார். இதில் அந்த வாலிபரின் முகம் மற்றும் தோள்பட்டை வெந்தது. எரிச்சல் தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். உடனே அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விசாரணை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தப்பி ஓடிய பெண்ணை தேடி வந்தார்கள்.இந்தநிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் திராவகம் வீசிய பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்