கயத்தாறில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்
கயத்தாறில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு வெறிேநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை மருத்துவர் டாக்டர் மனோஜ்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 167 நாய்களுக்கு வெறிேநாய் தடுப்பூசி போடப்பட்டது. மருத்துவர்கள் புனிதா, விஜயசிரி மற்றும் கால்நடை மருந்தாளுர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை மேலாண்மை பணியாளர்கள் செய்திருந்தனர்.