பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்கான காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் நேற்று தேர்வு எழுதினர். மாநில அளவிலான கேள்வித்தாள் மூலம் இந்த தேர்வு நடத்தப்பட்டது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு தொடங்கி உள்ளது.
ஒருசில மெட்ரிக் பள்ளிகளில் ஏற்கனவே காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது.