ரூ.3 கோடியே 90 லட்சத்துக்குகதர் விற்பனை செய்ய இலக்கு

சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு ரூ.3 கோடியே 90 லட்சத்துக்கு கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

Update: 2023-10-03 19:07 GMT

கதர் விற்பனை

சேலம், திருவள்ளுவர் சிலை அருகில் காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சேலம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 90 லட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு தள்ளுபடி

கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 76 லட்சத்திற்கு கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பட்டு மற்றும் பாலியஸ்டர்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது.

எனவே தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி அதிக அளவு கதர் துணிகள் வாங்கி கிராமப்புற பெண்கள் மேம்பாட்டிற்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், உதவி கலெக்டர் சுவாதிஸ்ரீ, கதர், கிராம தொழில்கள் நிறுவன உதவி இயக்குனர் சந்திரசேகரன், கவுன்சிலர் கிரிஜா குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்