7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
கொல்லிமலை அடிவாரத்தில் விவசாய நிலத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
சேந்தமங்கலம்
கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புது கோம்பை காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியம். இவரது விவசாய நிலத்தில் நேற்று திடீரென்று 7 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு வந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த விவசாய தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நாமக்கல் வனச்சரகர் பெருமாள் உத்தரவின்பேரில் காரவள்ளி வனத்துறை சோதனை சாவடி வனக்காப்பாளர் அங்கப்பன், சோதனை சாவடி உதவியாளர்கள் விஷால் கண்ணன், திருப்பதி மற்றும் வனத்துறையினர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த மலைப்பாம்பை பிடித்து கொல்லிமலைக்கு செல்லும் வழியில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் பாதுகாப்பாக விட்டனர்.