புழல் சிறை கைதி திடீர் சாவு

புழல் சிறை கைதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-23 05:13 GMT

புழல் தண்டனை சிறையில் 900-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு காஞ்சீபுரம் மாவட்டம் மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(வயது 66) என்பவர் சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் வழக்கில் கைதாகி, தண்டனை பெற்று அடைக்கப்பட்டு இருந்தார்.நேற்று முன்தினம் இரவு திடீரென கைதி ராதாகிருஷ்ணனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சிறை போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ராதாகிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து கைதி ராதாகிருஷ்ணன் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்