வீரட்டானேஸ்வரர் கோவிலில் தூய்மைப்பணி
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தூய்மைப்பணி நடந்தது.
திருக்கோவிலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகம் இணைந்து நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்த சிறப்பு முகாமை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடத்தியது. இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா முன்னிலை வகித்தார். திருக்கோவிலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் சுற்றுப்புற தூய்மை குறித்து விளக்கமளித்தார். முகாமில் கலந்து கொண்ட திருக்கோவிலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் விரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர். முகாமில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.