தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டியில் பொது மக்கள் தங்கள் பகுதி குறைகளை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம் .

Update: 2022-07-22 16:00 GMT

சாலை சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும் வாகனஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜேசுதாஸ், பரமக்குடி.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் பாரதிநகர் குமாரய்யா கோவில் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்குகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் இதன் மூலம் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்வர்தீன், ராமநாதபுரம்.

குடிநீர் வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி கட்டிடங்களில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், திருவாடானை.

பராமரிப்பு இல்லாத பூங்கா

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் உள்ள அம்மா பூங்காவில் ஏராளமான நாணல் செடி மற்றும் புற்கள் வளர்ந்தும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. உடனடியாக இந்த பூங்காவில் உள்ள உபகரணங்களை சரி செய்து நாணல் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ரெகுநாதபுரம்.

பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் குடிதண்ணீருக்காக தள்ளுவண்டியில் குடங்களுடன் அலையும் நிலைதான் இருந்து வருகின்றது. ஆர்.எஸ். மங்கலம் அருகே சோழந்தூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள களக்குடி பகுதியில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாயில் இருசக்கர வாகனம், தள்ளு வண்டியில் குடங்களுடன் தண்ணீர் எடுத்து வரும் நிலை நீடிக்கிறது. எனவே பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

Tags:    

மேலும் செய்திகள்